கொழும்பின் வத்தளைப் பகுதியில் இருந்து திருடப்பட்ட லொறி ஒன்று கடுவெல நீதிமன்றத்திற்கு அருகில் பயணிக்கும்போது, பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
பொலிஸாரின் கட்டளையை புறக்கணித்து சென்ற லொறி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த லொறி திருடப்பட்டமை தொடர்பில், உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
நுரைச்சோலைவிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை கொண்டு செல்லும் போது, குறித்த லொறி கொள்ளையிடப்பட்டது.
பொலிஸார் வெல்லம்பிட்டிய மற்றும் கடுவெல் பகுதிகளில் லொறியை சோதிக்க முற்பட்ட போது, அதன் சாரதி தப்பிச் செல்ல முயன்றதால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.
லொறியின் சக்கரங்களில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, லொறி நிறுத்தப்பட்டு, சாரதி கைது செய்யபட்டார். மேலும், சாரதியிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.