BREAKING

இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கியதில் தாயும் மகனும் உயிரிழப்பு.!

ஹம்பாந்தோட்டை சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சோக சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

அருகிலுள்ள வீட்டில் பதிக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார வடத்தில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இறந்த குழந்தை தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கீகரிக்கப்படாத மின்சார வடத்தில் சிக்கியதாகவும், தனது மகனைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்த தாய்க்கும் மின்சாரம் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 38 வயது தாயும் அவரது 05 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts