BREAKING

இலங்கை செய்திகள்

15 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – இளைஞனை தேடும் பொலிஸார்.!

பாடசாலை மாணவியை, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிவித்து, கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு உட்படுத்தி விட்டு, 42 நாட்களுக்கு பின்னர், பர்தாவை அணிந்து நடுவீதியில் விட்டு சென்ற இளைஞனை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

இந்த சம்பவம், பிபில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விப்பயிலும் கணுல்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது 04 மாதங்களுமான பாடசாலை மாணவியை, அவருடைய சட்டரீதியான பொறுப்பானவர்களிடமிருந்து கடத்திச் சென்று இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார்.

யாயபார கணுல்வெல முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட யுவதி, 2024 மே மாதம் முதல் அந்த இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதற்கு அந்த யுவதியின் தாய் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2025 ஜனவரி 22 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் யுவதியின் வீட்டுக்கு வந்த அந்த இளைஞன், மஹியங்கனையில் உள்ள முஸ்லிம் கிராமத்துக்கு கடத்திச் சென்றுள்ளார். அவ்வாறு கடத்திச் செல்லும் போது அந்த யுவதிக்கு, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து அழைத்துச் சென்றுள்ளார்.

ஜனவரி 22ஆம் திகதி முதல் மார்ச் 04 ஆம் திகதி வரையிலும், அந்த யுவதியை அவ்விளைஞன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், தான் கொழும்புக்கு கூலி வேலைக்குச் செல்வதாக கூறி, அந்த யுவதிக்கு புர்கா அணிந்து, மஹியங்கனை நகருக்கு மார்ச் 05 ஆம் திகதியன்று அழைத்துவந்து, ஆட்டோவில் ஏற்றி, அந்த யுவதியின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை தொடர்பில், தன்னுடைய தாயிடம் விபரித்த யுவதி, தாயுடன் சென்று பொலிஸில், மார்ச் 5 ஆம் திகதியன்று முறையிட்டுள்ளார். எனினும், தன்னை தடுத்து வைத்திருந்த வீடு ஞாபகத்தில் இல்லை என்றும் எனினும், சுற்றி முஸ்லிம் மட்டுமே இருந்தனர் என முறைப்பாட்டில் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

முறைபாட்டை ஏற்றுக்கொண்ட பிபில பொலிஸார், சந்தேகநபரான அந்த இளைஞனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts