காட்டில் திசைகாட்டி எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் ஒரு கூட்டத்திற்கு சிறந்த தலைவன்
சிறு காலத்தில் எத்தனை மாற்றம் எத்தனை செயற்பாடுகள் எத்தனை சிந்தணைகள் சொல்ல தொடங்கினால் முடிக்க முடியுமா? பல பாடசாலைகளில் அதிபரை காரியாலையத்துக்கு எப்போது சென்றாலும் பார்க்க முடியும். ஆனால் எமது அதிபரை காரியாலையத்தில் காண்பது மிகவும் அரிது. பாடசாலையின் ஏதோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு திட்டத்தை நடைமுறைபடுத்திக் கொண்டு இருப்பார். வீட்டிலா ? பாடசாலையிலா ? அதிக நேரம் இருந்தார் என்று கேட்டால் . பாடசாலை என்பது தான் பதிலாக அமையும் .
எங்கள் தவறுகளுக்காக எத்தனை தடவை கண்டித்து இருப்பார். எத்தனை தடவை தண்டித்து இருப்பார். ஆனால் ஒரு போதும் எங்களை கைவிட்டது இல்லை எமது திறமைகளை வெளிகொண்டு வர நினைத்து தயங்காது உழைத்த எமது அதிபரை தொலைத்து விட்டோம்.
மீண்டும் கூறுவது ஒன்று மட்டுமே!!
“மத்தி தொலைத்த திசைகாட்டி எங்கள் அதிபர்”