Home இலங்கை செய்திகள் யாழில் பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழில் பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

9
0

யாழ். (Jaffna) வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்றைய தினம் (07.03.2025) இரவு வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கரவெட்டி திரு இருதயக்கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்று வரும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கரவெட்டி மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் வயது 14 என்ற மாணவன் ஆவார். இந்நிலையில், சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here