உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் SK vlog என்ற வலையொளி பக்கத்தின் வலையொளியாளரான கிருஷ்ணா என்ற காவாலி இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காவாலி கிருஷ்ணா வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களின் காணொளிகளை தனது வலையொளி பக்கத்தில் பதிவேற்றி, புலம்பெயர் மக்களிடம் பணத்தினை பெற்று அதன் மூலம் உதவி செய்வதாக காண்பித்து கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து வருகின்றான்.
பணத்தை இவனது கணக்குக்கு வைப்பிலிட்ட புலம்பெயர் மக்கள், உதவி செய்த ஆதாரங்களை கேட்டால் அவர்களை மிரட்டுவான் அல்லது அவர்களது அழைப்புக்கு பதிலளிக்க மாட்டான்.
இவன் பெண்களுடன் பாலியல் ரீதியான சீண்டல்களிலும் ஈடுபட்டுள்ளான். இவன் செய்த திருகாதாளம் சம்பந்தமான காணொளி ஒன்றினை தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப்பர் பதிவேற்றிய நிலையில் வாள்வெட்டு குழுக்களை வைத்து மிரட்டியுள்ளான். தமிழ் புரோஸ் தன்னிடமுள்ள ஆதாரங்களை காண்பித்தவேளை கிருஷ்ணா என்ற காவாலியில் முழுப் பிழை உள்ளது என்று உணர்ந்த வாள்வெட்டு குழுக்கள் அதிலிருந்து விலகின.
காணொளிகளை பதிவு செய்யும்போது அந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தின் மனம் நோகும்படியாக பேசுவது, அவர்களை எள்ளி நகையாடுவது, இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளிக்குள் அழைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றான். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இவன் கடந்த சுதந்திர தினத்தன்று சிங்க கொடியை தூக்கிக்கொண்டு சுதந்திர தின பேரணியில் ஈடுபட்டுள்ளான். அத்துடன் விடுதலைப் புலிகளில் பிழை உள்ளது என்பது போலும், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பது போலும் பேசினான். அத்துடன் இனி யாரும் பயமின்றி சுதந்திர தினம் கொண்டாட முடியும் என்றும் கூறியுள்ளான்.
இவனுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணியான எஸ்.செலஸ்ரின் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் விபரங்களை திரட்டி அவர்களிடம் விசாரணைகளை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகமும் ஈடுபட்டு வருகிறது.
இவனது திருகுதாளம் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவரும்.

