BREAKING

இலங்கை செய்திகள்

இலங்கையில் ’நாள் ஒன்றுக்கு 5 பெண்கள் துஷ்பிரயோகம்’ – ரோஹினி கவிரத்ன..!

2022ஆம் ஆண்டு மாத்திரம் 1984 பெண்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏறத்தாழ நாள் ஒன்றுக்கு 5 துஷ்பிரயோகங்கள். பதிவாகி இருக்கின்றன என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு 16 வயதுக்கு குறைந்த சிறுவயது கர்ப்பமடைந்தவர்களின் எண்ணிக்கை 163ஆக இருந்தது. 2024ஆம் ஆண்டில் அது 213ஆக அதிகரித்துள்ளது என்றார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேபோன்று பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பெண்களில் நூற்றுக்கு 90 வீதமான பெண்கள் பாலியல் மற்றும் வாய்மூல தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர்.5 பெண்களில் ஒருவர் தங்களுக்கு நெருக்கமானவர்களால் உடல் ரீதியில் அல்லது பாலியல் ரீதியில் தொந்தரவுகளுக்கு ஆளாகுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts