BREAKING

இலங்கை செய்திகள்

சிக்கலில் மாட்டிய ரணில் – விசாரணையை ஆரம்பிக்கும் அநுர அரசு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என அநுர அரச தரப்பு அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிடப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

அதேவேளை, மத்திய வங்கி பத்திர மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும்.

அத்துடன் இவை இரண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கான உறுதி பூண்டுள்ளது.

மேலும், ரணில் விக்ரமசிங்க முன்னர் அரசியல் பாதுகாப்பைப் பெற்ற அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் என விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts