Home இலங்கை செய்திகள் கிளிநொச்சியில் கிராமசேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட பெண்கள் கைது

கிளிநொச்சியில் கிராமசேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட பெண்கள் கைது

6
0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் கிராமசேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த 08.03.2025 சர்வதேச மகளிர் தினத்தன்று நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நான்கு பெண்கள் கிராம சேவையாளரிடம் சென்று தமது வதிவிடத்தை உறுதிப்படுத்தல் தொடர்பாக உறுதி செய்து தருமாறு கேட்ட பொழுது உரிய சரியான ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என கிராம சேவையாளர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்கள் கிராம சேவையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவரை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், கிராம சேவையாளர் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ததை அடுத்து இச்சம்பவத்தின் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here