அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய தமிழ்ப்பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை புரிந்தவரை கைது செய்ய வலியுறுத்தி வைத்தியர்கள் இன்று நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
நாட்டின் சகல வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அநுபுரதம் வைத்தியசாலையில் பணியாற்றிய தமிழ்ப் பெண் வைத்தியரை பாலியல் வன் கொடுமை புரிந்ததாக நம்ப்ப்படும் இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இடம்பெறவுள்ள இன்றை போராட்டத்தில் வைத்தியர்கள் வித்தியாசமான வடிவத்தில் ஈடுபட எண்ணியுள்ளனர்.
இதற்காக இன்று காலை ஆரம்பமாகும் இப. போராட்டம் 24 மணிநேரம் இடம்பெறவுள்ளதோடு தனியார் துறையினையும் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.
