Home இலங்கை செய்திகள் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞன்! பொலிஸ் விசாரணை தீவிரம்

கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞன்! பொலிஸ் விசாரணை தீவிரம்

3
0
an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில் கீரியகொடெல்ல சந்திக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் 23 வயதான அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here