ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் தீவிரமாக முயன்று வரும் நிலையில் ஊழல்வாதிகளை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களைப் பாதுக்காக்கும் முகமாகவும் செயற்படும் சந்திரசேகர் பாரிய பண டீலிங்கில் ஈடுபடும் ஒருவராவார்.
அண்மையில் யாழ் GA மகன் ஆதிரன் மதுபோதையில் அரச இலச்சனை பொறித்த தனிப்பட்ட வாகனத்தை யாழ் நகரில் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தினார், இதில் குறித்த மொன்டீரோ வாகனம் ஆட்டோ புத்தகத்தின் இலக்கத்துக்குக்குரிய ஒன்றாகும். இவ்விபத்தைக் கேள்வியுற்ற அமைச்சர் சந்திரசேகரன் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று குறித்த விபத்தின் தடங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார், gaவை காப்பாற்றும் முயற்சிகள் செய்தார்
குறித்த விபத்தில் போதையுடன் வாகனம் ஓட்டிய மகனை விட்டு மற்றைய மகனை மதுப்பரிசோதனை மேற்கொள்ள பொலிசாருக்கு அழுத்தம் வழங்கி குறித்த மோசடியை மூடி மறைக்க உதவினார், அத்துடன் யாழ் GA யின் குறித்த தனிப்பட்ட பஜிரோ வாகனம் ஆட்டோ இலக்கத்துக்குரிய புத்தகமாகும், குறித்த விடயத்தைச் சீர்செய்ய அமைச்சர் அவர்கள் மோட்டார் வாகனத் தலைமை அலுவலகத்துடன் பேசும் முயற்சிகளை முடுக்கி விட்டு இருந்தார்.
மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் நிபுணர்களின் எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி, அமைச்சர் சநதிரசேகரனால் 100 அல்லது அதற்கு மேற்பட்ட கடலட்டை (Sea Cucumber) வளர்ப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்காக கோடிக்கணக்கான பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாகத் தகவல்கள் வந்துள்ளது. அமைச்சரின் இந்தப் பணக் கொடுக்கல் வாங்ல்களால் அரசாங்கத்தின் செல்வாக்கு யாழ் பகுதிகளில் குறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
மதுபான சாலை உரிமையாளர்களுடனும் ரகசிய டீல்
அத்துடன் பல மதுபான சாலை உரிமையாளர்களுடனும் ரகசிய டீல் வைத்துள்ள இவர் அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தினை இலஞ்சமாகப் பெற்றும் வருகிறார்.
வடக்கில் உள்ள பெரிய ஊயல் முதலைகளை நெருங்குவதில் மிகப்பெரிய தடையாக அமைச்சர் சந்திரசேகர் இருந்து வருகிறார், இவரது அழுத்தம் காரணமாக ஆளுநராலோ அல்லது ஏனைய உயர் அதிகாரிகளாலோ மக்களுக்கு ஊழலற்ற சேவையைச் செய்ய முடியாதுள்ளது, தொடர்ந்து பல ஊழல்வாதிகளை அமைச்சர் காப்பாற்றியே வருகிறார்.
வடக்கில் ஊழல்வாதிகளுக்கு எதிரானரபல நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர் அமைச்சர் சந்திரசேகர்தான் உதாரணமாக முன்னாள் ஆளுநர் சாள்ஸ் முதல் GA பிரதீபன் வரை கூறலாம்
இவை மட்டுமல்ல முறையற்ற விதத்தில் பணம் சேர்த்த பல வர்த்தகர்களுடன் பணக் கொடுக்கல்வாங்கல்களைக் கொண்டுள்ளார்.
அண்மையில் அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் தமது அரசுக்கும் எமது முகநூலுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை ஒன்றை விட்டார், உண்மையில் அது அரசின் முகம் அல்ல, ஊழல்வாதிகளின் முகமாகத்தான் இந்த அறிக்கை அமைந்து இருந்தது.
நாம் பல பதிவுகளில் எமக்கும் அரசுக்கும் தொடர்புகள் இல்லை, ஆனால் ஜனாதிபதியை ஆதரிக்கிறோம் என்றுதான் கூறி வருகிறோமே தவிர அரசுதான் இதைச் செய்யச் சொல்கிறது என்று எக்காலமும் கூறவில்லை.
எமக்கு அப்படியான ஒரு ஆதரவு தேவைப்பட்டதும் இல்லை. Clean SriLanka என்ற திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ள இந்நிலையில் ஊழல்வாதிகளைக் காப்பாற்றும் ஒருவராகவும் அந்தத் திட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் ஒருவராகவும் அமைச்சர் திகழ்கின்றார்.
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வடக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் NPP தோல்வியுற்றால் அதற்குப் பிரதான காரணமாக அமைச்சர் சந்திரசேகர் அமைந்திருப்பார் என்று பலர் எதிர்வு கூறியுள்ளனர்.
இவ்வாறான மக்களால் தெரிவுசெய்யப்படாத ஒரு ஊழல்வாதியை அரசு அமைச்சர் பதவியில் வைத்திருப்பதை மக்கள் விரும்பவில்லை என்பதுடன், இது வடக்கில் அரசின் முகத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடு என்று பலர் கருதியுள்ளனர்.
பிரதி : ஊழல் ஒழிப்பு அணி வன்னி