BREAKING

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி வாள்வெட்டு – பிரபல யூட்டுபேர், மனைவி உட்பட மூவருக்கு விளக்கமறியல்..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவின் கட்டைக்காட்டு பகுதியில் கடந்த 04.03.2025 குடும்பம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் இதுவரையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தவாரம் ஒருவரும் நேற்றைய தினம் (15.03.2025) வலையொளியளரான DK கார்த்திக் (youtuber) (கணவன், மனைவி) உள்ளடங்களாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் 16.03.2025 கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் 21/03/2025 வெள்ளி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவு இடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts